சென்னை: எம்.ஆர்.சி. நகரில் நடைபெற்ற கணக்கு தணிக்கையாளர்கள் அமைப்பின் 90வது ஆண்டு விழாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.
பின் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய போது, சனாதனம் குறித்து எழுந்த கேள்விக்கு பதிலளித்த அவர், அரசியல் சாசனப்படி, உறுதிமொழி எடுத்துக் கொண்டு அமைச்சராக பொறுப்பு ஏற்று கொள்கிறோம். அப்படி இருக்கும்போது, என்ன தான் கொள்கை இருந்தாலும், ஒரு மதத்தை ஒழிப்பேன் என்று சொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை. முக்கியமாக அமைச்சருக்கு அது இல்லவே இல்லை என கூறினார்.
மேலும், மேடையில் இருந்து கொண்டு ஒரு குறிப்பிட்ட மதத்தை ஒழிக்கப் போகிறேன் என்று சொன்னால், அது மிக பெரிய தவறு. அப்படி ஒழிப்பேன் என்று சொல்லவில்லை என்று இப்போது சொல்வது சரியானதாக இருக்காது. சனாதனத்தை எதிர்க்கும் மாநாடு என்று கூறவில்லை, ஒழிக்கின்ற மாநாடு என்று கூறினார்கள். அதே மேடையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவும் இருந்திருக்கின்றார். அமைச்சராக இருப்பவர் பொறுப்போடு பேச வேண்டும் என்று கூறினார்.
இதையும் படிங்க:Locanto app cheating: வலைத்தளம் மூலம் வலைவிரிக்கும் லோகாண்டோ.. போலீஸ் எச்சரிக்கை!