திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக நேற்று (மார்ச் 11) தாங்கள் போட்டியிடும் 6 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. விடுதலை சிறுத்தைகள், சிபிஎம் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மதிமுக சார்பில் மதுராந்தகம் (தனி) தொகுதியில் மல்லை சத்யா, வாசுதேவநல்லூர் (தனி) தொகுதியில் மருத்துவர் சதன், அரியலூர் தொகுதியில் வழக்கறிஞர்சின்னப்பா, சாத்தூரில் மருத்துவர்ரகுராம், மதுரை தெற்கு தொகுதியில் புதூர் பூமிநாதன், பல்லடம் தொகுதியில்முத்து ரத்தினம் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொகுதி பட்டியலை அண்ணா அறிவாலயத்தில் விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டார். வானூர், காட்டுமன்னார்கோயில், செய்யூர், அரக்கோணம், திருப்போரூர், நாகப்பட்டினம் தொகுதிகளில் தனிச்சின்னத்தில் போட்டியிடுகிறது. திருப்போரூர், நாகப்பட்டினம் ஆகியவை பொதுத் தொகுதி என்பது கவனிக்கத்தக்கது.