தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்களர் பட்டியல் வெளியீடு - chennai local body election final voter list

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்களர் பட்டியலை தேர்தல் அலுவலர் ககன் தீப் சிங் பேடி இன்று வெளியிட்டார்.

வாக்களர் பட்டியல் வெளியீடு
வாக்களர் பட்டியல் வெளியீடு

By

Published : Dec 9, 2021, 12:29 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் விரைவில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில் சென்னையில் உள்ள ரிப்பன் மாளிகையில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்களர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் ககன் தீப் சிங் பேடி வெளியிட்டார்.

தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலின் படி, சென்னையில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 61 லட்சத்து 18 ஆயிரத்து 734 ஆகும். இதில் ஆண் வாக்காளர்கள் 30 லட்சத்து 23 ஆயிரத்து 803 வாக்காளர்களும், பெண் வாக்காளர்கள் 30 லட்சத்து 93 ஆயிரத்து 355 மற்றும் மூன்றாம் பாலின் வாக்காளர்கள் 1,576 உள்ளனர்.

வாக்களர் பட்டியல் வெளியீடு

குறைந்தபட்சமாக ஆலந்தூர் மண்டலம் வார்டு 159ல் 3 ஆயிரத்து 116 வாக்காளர்களும், அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலம் வார்டு 137 ல் 58 ஆயிரத்து 620 வாக்காளர்களும் உள்ளனர்.

வாக்காளர் பட்டியல் பெருநகர சென்னை மாநகராட்சியின் 1 முதல் 15 வரையிலான மண்டலங்களில் உள்ள 200 வார்டு அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படுகிறது.

பொதுமக்கள் தங்களது பெயர்கள் மற்றும் குடும்ப பட்டியலில் உறுப்பினர்களின் பெயர்கள் குறித்த விவரங்கள் வாக்காளர் இடம்பெற்றுள்ளனவா என சரிபார்த்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

சென்னையில் மொத்தம் உள்ள 5ஆயிரத்து 794 வாக்குச்சாவடிகளில், ஆண் வாக்காளர்கள், பெண் வாக்காளர்களுக்கு என தலா 255 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக தேனாம்பேட்டை மண்டலத்தில் 622 வாக்குச் சாவடிகளும் குறைந்தபட்சமாக மணலி மண்டலத்தில் 97 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : கோயில்களில் இலவச திருமணம்: மாற்றுத்திறனாளிகளுக்கு முதலமைச்சரின் அன்பு பரிசு

ABOUT THE AUTHOR

...view details