தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செப்.15க்கு பிறகு பல்கலைக்கழக இறுதி பருவத்தேர்வு - அமைச்சர் அறிவிப்பு! - final exams date

சென்னை: பல்கலைக்கழகங்களில் இறுதி பருவத்தேர்வு செப்டம்பர் 15க்கு பிறகு நடைபெறும் என அமைச்சர் கே.பி. அன்பழகன் அறிவித்துள்ளார்.

பல்கலைக் கழக இறுதி பருவத் தேர்வு குறித்த விபரம் வெளியிட்ட அமைச்சர்!
பல்கலைக் கழக இறுதி பருவத் தேர்வு குறித்த விபரம் வெளியிட்ட அமைச்சர்!

By

Published : Sep 1, 2020, 9:12 PM IST

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், “உயர்கல்வித் துறையின் கீழ் செயல்பட்டுவரும் அனைத்து பல்கலைக் கழகங்களின் கட்டுப்பாட்டில் பயிலும் மாணாக்கர்கள் மற்றும் பலவகை தொழில்நுட்ப கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்கள் ஆகியோர்களுக்கான இறுதி பருவத்தேர்வு செப்டம்பர் 15க்கு பிறகு நடத்தப்பட உள்ளது.

இதற்கான விரிவான தேர்வு அட்டவணை மற்றும் தேர்வு மையங்கள் விரைவில் வெளியிடப்படும். மேற்படி இறுதி ஆண்டு தேர்வுகள் மாணாக்கர்கள் நேரில் வந்து எழுதக்கூடிய தேர்வாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

மாணாக்கர்கள் தேர்விற்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

பல்கலைக் கழக இறுதி பருவத்தேர்வு குறித்த விவரம் வெளியிட்ட அமைச்சர்!

மேலும், B.Arch எனப்படும் கட்டட அமைப்பியல் இளநிலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கான இணையதள விண்ணப்ப பதிவு செப்டம்பர் 7ஆம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது. B.Arch இளநிலை பட்டப்படிப்பிற்கு சேர விரும்பும் மாணாக்கர்கள் செப்டம்பர் 7ஆம் தேதி முதல் www.tneaonline.org என்ற இணையதளத்தில் தங்கள் பதிவினை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க...14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்துதல் ரத்து; எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் - சென்னை ஆணையர்

ABOUT THE AUTHOR

...view details