தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கைதாகிறாரா பயில்வான் ரங்கநாதன்? தயாரிப்பாளர் புகாரால் பரபரப்பு! - filmmaker files complaints against bayilvan ranganathan

கதாநாயகர்கள், கதாநாயகிகள் குறித்து காமெடி நடிகர் பயில்வான் ரங்கநாதன் தொடர்ச்சியாக அவதூறு பரப்பி வருவதாகவும், அவரை கைதுசெய்து நடவடிக்கை எடுக்கக் கோரியும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

புகார்
புகார்

By

Published : May 8, 2022, 12:06 PM IST

சென்னை: திரைப்பட தயாரிப்பாளர் கே. ராஜன், இயக்குநர் திருமலை உள்ளிட்டோர் நடிகர் பயில்வான் ரங்கநாதன் மீது சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர்.

அதில் பயில்வான் ரங்கநாதன் யூடியூப் சேனல்களில் கதாநாயகர்கள், கதாநாயகிகள் குறித்து ரகசியங்களை வெளியிடுவதாக கூறி அவதூறு பரப்பி வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.

புகார் மனு அளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய கே.ராஜன் , பயில்வான் ரங்கநாதன் யூடியூப் சேனல்களில் கதாநாயகிகள், கதாநாயகர்கள் பற்றி தொடர்ச்சியாக பொய்யான தகவல்களை கூறி பணம் சம்பாதிப்பதை தொழிலாக செய்கிறார் என்று குற்றஞ்சாட்டினார்.

மேலும் தன்னை யாராவது தட்டிக் கேட்டால் நான் தூத்துக்குடிகாரன் அரிவாளால் கழுத்தை அறுத்துவிடுவேன் என பயில்வான் ரங்கநாதன் மிரட்டுகிறார். மிரட்டல் விடுக்கும் வகையில் ரங்கநாதன் தொடர்ந்து பேசி வருவதால், அவர் மீது புகார் அளிக்க கதாநாயகர்கள், கதாநாயகிகள் அஞ்சுவதாக குறிப்பிட்ட அவர் , காவல்துறையினர் பயில்வான் ரங்கநாதனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: பெண்கள் குறித்து அருவருப்பு பேச்சு - பயில்வான் ரங்கநாதன் மீது காவல் ஆணையத்தில் புகார்

ABOUT THE AUTHOR

...view details