சென்னை:காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் தலைமையிலான உயர்மட்டக்குழு, ஒன்றிய தொழில்துறை செயலாளர் கிருஷ்ணனிடம் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
காவிரி டெல்டாவில் செயல்படும் ஹைட்ரோகார்பன் திட்டங்களால் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் தலைமையில் ஏழு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
காவிரி டெல்டா மாவட்டங்களில், பல்வேறு கட்டங்களாக நான்கு மாதங்கள் நேரடி கள ஆய்வு மேற்கொண்ட பின், இந்த குழுவினர் சுமார் 106 பக்கங்கள் கொண்ட தனது முழுமையான அறிக்கையை ஒன்றிய தொழிற்துறை செயலாளர் கிருஷ்ணனிடம் சமர்ப்பித்துள்ளனர்.