சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே ப்ரீபெய்ட் ஆட்டோ ஸ்டாண்ட், வால்டாக்ஸ் ஆட்டோ ஸ்டாண்ட் உள்ளன. இங்குள்ள ஆட்டோ ஓட்டுநர்கள், சென்ட்ரல் ரயில் பயணிகளிடம் முன்பணம் பெற்று ஆட்டோவை வாடைக்கு எடுத்து செல்வார்கள்.
இந்த இரண்டு ஆட்டோ ஸ்டாண்ட் ஓட்டுநர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது. ப்ரீபெய்ட் ஸ்டாண்ட் ஆட்டோக்களால் தங்கள் தொழில் பாதிப்படுவதாக கூறி நேற்றிரவு வால்டாக்ஸ் ஆட்டோ ஸ்டாண்டைச் சேர்ந்த ராஜேஷ், சரவணன், ஜார்ஜ், அமுல் உள்ளிட்ட ஐந்து பேர் ப்ரீபெய்ட் ஆட்டோ பூத்திற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளனர்.