தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

லோகேஷ் கனகராஜின் 'ஜி ஸ்குவாட்' வழங்கும் "ஃபைட் கிளப்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு! - உறியடி விஜய்குமார்

FIGHT CLUB: இயக்குநர் அப்பாஸ் ஏ ரஹ்மத் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படம் “ஃபைட் கிளப்” இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

FIGHT CLUB
ஃபைட் கிளப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 29, 2023, 7:52 PM IST

சென்னை: இயக்குநர் அப்பாஸ் ஏ ரஹ்மத் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படம் “ஃபைட் கிளப்” (FIGHT CLUB). இந்த படத்தில் விஜய்குமார் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தை ரீல் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஆதித்யா தயாரிக்கிறார். இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.

மேலும், லோகேஷ் கனகராஜின் 'ஜி ஸ்குவாட்' நிறுவனம் “ஃபைட் கிளப்” வழங்குகிறது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மோனிஷா மோகன் மேனன், கார்த்திகேயன் சந்தானம், சங்கர் தாஸ், அவினாஷ் ரகுதேவன் சரவணன் வேல் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

“ஃபைட் கிளப்” படத்திற்கு ஒளிப்பதிவாளராக லியோன் பிரிட்டோவும், கலை இயக்கத்திற்கு ஏழுமலை ஆதிகேசவனும், படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள கிருபாகரனும், சண்டைக் காட்சிகளுக்கு விக்கி மற்றும் அம்ரீன் - அபுபக்கர் ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக படத்தில் இணைந்துள்ளனர். இந்த படத்திற்கான கதையை சசி அமைத்திருக்கிறார். மேலும், கிரியேட்டிவ் தயாரிப்பாளராக விஜய்குமார் பணியாற்றி உள்ளார்.

ஆக்சன் எண்டர்டெய்னராக தயாரிக்கப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் (First Look) போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் கதாநாயகனான விஜய்குமாரின் வித்தியாசமான தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. இந்த படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் படக்குழு குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக, உறியடி படத்தினை இயக்கி நடித்திருந்தார் விஜய்குமார். உறியடி படத்தில் கல்லூரி மாணவர்களை எப்படி சாதி அரசியல் பாதிக்கிறது என்பதை புதுமையான வடிவத்தில் சொல்லியிருப்பார் . பின் உறியடி 2 படத்தில் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் விஷ வாயுவால் மக்கள் எப்படி பாதிப்படைகின்றனர் என்பதை சொல்லிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை: மருத்துவமனை அறிக்கை வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details