சென்னை:அசோக் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் இன்று (ஜூன்.21) மதுபோதையில் கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது போக்குவரத்துக் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அங்கு பணியில் இருந்த போக்குவரத்துக் காவலர் அருணகிரி என்பவரிடம் கார்த்திக் சானிடைசர் கேட்டுள்ளார். காவலர் அருணகிரியும் அவருக்கு சானிடைசர் வழங்கியுள்ளார். ஆனால், கார்த்திக் கையை துடைத்து விட்டு மீண்டும் மீண்டும் அவரிடம் சானிடைசர் கேட்க அதற்கு காவலர் மறுத்துள்ளார்.
மீண்டும் மீண்டும் காவலரிடம் சானிடைசர் கேட்ட போதை இளைஞருக்கு சரமாரி அடி! இதில் ஆத்திரமடைந்த கார்த்திக், அரசு இலவசமாகக் கொடுத்த சானிடைசரை உன்னால் கொடுக்க முடியாதா என ஒருமையில் பேசியுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபமடைந்த காவலர் அருணகிரி, கார்த்திக்கை கீழே தள்ளி விட்டு சரமாரியாக அடித்துள்ளார்.
இதில் கார்த்திக்கிற்கு ரத்தக் காயங்கள் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு கிண்டி காவல் நிலையம் அழைத்து சென்று அவர் மீது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சிவசங்கர் பாபாவால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு!