தமிழகத்தில் மக்களவை மற்றும் 22 சட்டப்பேரவைத் தொகுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இன்னும் தேர்தல் நடக்க 6 தினங்களே உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அதிமுக-அமமுக இடையே மோதல்: மசூதி அருகே பரபரப்பு! - AMMk
சென்னை: ஆவடியில் தேர்தல் பரப்புரையின் போது அதிமுக மற்றும் அமமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. அதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வேணுகோபால் தொகுதிக்கு உட்பட்ட ஆவடியில் பரப்புரை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து ஆவடி நேரு பஜார் அருகே உள்ள மசூதியில் வாக்கு சேகரிக்க சென்றார்.
அப்போது திடீரென அதிமுக மற்றும் அமமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இரு தரப்பினரும் கைகளை தூக்கி தாக்குவது போல் கருத்து மோதல் ஏற்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்து கொண்டனர். இதனையடுத்து அங்கிருந்த காவல்துறையினர் இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். அதிமுகவினர் தோல்வி பயத்தினால் வேண்டுமென்றே வம்பு செய்ததாக அமமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.