சென்னை: சேப்பாக்கம் அடுத்த டாக்டர் பெசன்ட் சாலையில் என்.கே.டி பெண்கள் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. 50 ஆண்டுகள் பழமையான என்.கே.டி. பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச்சுற்றி சுமார் 15 அடி உயரமும், சுமார் 500 மீட்டர் நீளமும் கொண்ட சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு உள்ளது.
கடந்த சில நாட்களாக சென்னையில் பெய்து வரும் கன மழை, தண்ணீர் தேங்கியது உள்ளிட்ட காரணங்களால் பள்ளியின் சுற்றுச்சுவரில் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பள்ளிக்குப் பின்புறம் உள்ள இருசப்பன் தெருவை ஒட்டிய சுமார் 50 மீட்டர் தொலைவு கொண்ட சுற்றுச்சுவர் நேற்று திடீரென இடிந்து விழுந்தது. சுவர் இடிந்து விழுந்தபோது குறிப்பிட்டப் பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லாததால் நல்வாய்ப்பாக எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை.