தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 7, 2023, 8:22 AM IST

ETV Bharat / state

தமிழ்நாட்டில் 15 தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரிந்து வந்த 15 தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கி உத்தரவிட்டுள்ளது.

15 தலைமை ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு!
15 தலைமை ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு!

சென்னை:தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில், “பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் 15 தலைமை ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு பெறுகின்றனர். அதன் அடிப்படையில் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் 15 தலைமை ஆசிரியர்களுக்கும் மாவட்ட கல்வி அலுவலர் இடைநிலை பதவியில் பணி ஒதுக்கீடு செய்துள்ளார். இதன் கீழ் கல்வி மாவட்ட அளவில் மாவட்ட கல்வி அலுவலர் இடைநிலை பதவிகளில்,

  • மதுரை - முரளி
  • சிவகாசி கல்வி மாவட்டம் - லதா
  • தென்காசி - ராஜேஸ்வரி
  • தாரமங்கலம் கல்வி மாவட்டம் - மாதேஸ்
  • திருநெல்வேலி - ரமாதேவி
  • தூத்துக்குடி - குருநாதன்
  • நீலகிரி - சரஸ்வதி
  • மார்த்தாண்டம் கல்வி மாவட்டம் - ரவிச்சந்திரன்
  • ராமநாதபுரம் - சுதாகர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல் மாவட்ட தொடக்க கல்வி அலுவலராக,

  • நீலகிரி - ஆனந்தரசன்
  • விருத்தாச்சலம் கல்வி மாவட்டம் - ஜெய சந்திரன்
  • தேவக்கோட்டை கல்வி மாவட்டம் - சந்திரகுமார்
  • நாகப்பட்டினம் - பிரேம்குமார்
  • நாகப்பட்டினம் மாவட்ட தனியார் பள்ளிகள் - முருகன்
  • கோயம்புத்தூர் மாநகராட்சி - மாரிய செல்வம் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி கட்டாயம்!

ABOUT THE AUTHOR

...view details