தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'பட்ஜெட் தொலைநோக்குப் பார்வையுடன் உள்ளது' - எஃப்.ஐ.சி.சி.ஐ. இணைத் தலைவர் - FICCI Co-Chair kesavan shares his opinion

சென்னை: மத்திய நிதிநிலை அறிக்கை தொலைநோக்குப் பார்வையுடன் உள்ளது என எஃப்.ஐ.சி.சி.ஐ. இணைத் தலைவர் கேசவன் தெரிவித்துள்ளார்.

FICCI Co-Chair kesavan shares his opinion about budget 2020
FICCI Co-Chair kesavan shares his opinion about budget 2020

By

Published : Feb 2, 2020, 9:26 AM IST

2020-21ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்தார். இந்த நிதிநிலை அறிக்கை குறித்து விவாதிக்க எஃப்.ஐ.சி.சி.ஐ. (FICCI) அமைப்பு சென்னை தனியார் விடுதியில் சிறப்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.

பின்னர் எஃப்.ஐ.சி.சி.ஐ. இணைத் தலைவர் கேசவன் ஈடிவி பாரத்திற்கு பேட்டியளித்தார். அதில், “மத்திய நிதிநிலை அறிக்கை தொலைநோக்குப் பார்வையோடு உள்ளது. அரசியல் சார்ந்து அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளைக்கூட நிதிநிலை அறிக்கை மூலம் நிறைவேற்ற முயற்சிசெய்துள்ளனர்.

நான்காண்டில் மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள் அதிகளவில் அமைக்கப்படும் என்று பேசியுள்ளனர். அது நன்றாக நடக்கும் என்று நம்புகின்றேன். அதேபோல் மின்னணு பொருள்கள், ஜவுளித் துறை போன்றவை பற்றி பேசியுள்ளது நன்றாக உள்ளது. மேலும் நீர் மேலாண்மை, விவசாயம் போன்றவை பற்றி நிதிநிலை அறிக்கையில் உள்ளது. இதை அனைத்தையும் எவ்வாறு செயல்படுத்துகின்றனர் என்பதைப் பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

பட்ஜெட் தொலைநோக்கு பார்வையுடன் உள்ளது -எஃப்ஐசிசிஐ இணை தலைவர்!
இன்று வேண்டும் என்றால் திருப்தி இருக்குமா என்று தெரியவில்லை, இந்த நிதிநிலை அறிக்கைமூலம் நாளை என்று யோசித்தால் அது நன்றாக அமையும் என்பது எனது கருத்து.
அதேபோல் புதிதாகத் தொழில் தொடங்க முனைப்பு உள்ளவர்களுக்கு (ஸ்டார்ட் ஆஃப்) அதிகளவு இந்த நிதிநிலை அறிக்கை பயன் தரும். வரிச்சலுகை முதல் பல சலுகைகள் ஸ்டார்ட் ஆஃப் நிறுவனங்கள் பயன்பெறும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க...பட்ஜெட் குறித்து தலைவர்கள் கருத்து

ABOUT THE AUTHOR

...view details