சென்னை :தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் முத்தமிழ்செல்வி என்ற பெண்மணி வேலுநாச்சியார் போல் உடை அணிந்து குதிரை மீது அமர்ந்து தொடர்சையாக சுமார் 8 மீட்டர் தொலைவில் இருந்து 3 மணி நேரம் அம்பு எறிதல் நிகழ்வு நடைபெற்றது.
இந்த அம்பு ஏய்தல் நிகழ்வின் போது அப்பகுதி மக்கள், இளைஞர்கள் ஆராவாரத்துடன் உற்சாகபடுத்தினர். பின்னர் 3 மணி நேரம் முடியும் தருவாயில் 1,389 அம்புகளை ஏய்து யுனிக்கோ உலக சாதனை படைத்தார். அதற்க்கான சான்றிதழ்களையும், விருதுகளையும் யுனிக்கோ நிறுவனம் வழங்கி தனது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
யுனிக்கோ உலக சாதனை படைத்த பெண் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முத்தமிழ்செல்வி, ”குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் நடைபெற்ற அலங்கார ஊர்தி நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் நாசர் உள்ளிட்டோர் இடம்பெற்ற ஊர்தி மறுக்கப்பட்டது. இதன் காரணமாக நான் புரிந்த இந்த சாதனையானது தமிழ்நாட்டை சேர்ந்த வீரமங்கை வேலு நாச்சியார்காக சமர்பிக்கிறேன்.
சென்னையில் ஒரு வேலுநாச்சியார் அவர் போல் தமிழ்நாட்டில் பல பெண்மணிகள் உள்ளனர். பெண்கள் சாதனை புரிய முன்வர வேண்டும் என்பதற்க்காக 3 மணிநேரத்தில் 1,389 அம்புகள் எறிந்து யுனிக்கோ உலக சாதனை படைத்துள்ளேன்” எனக் கூறினார்.
இதையும் படிஙக் : வீட்டின் சுவர் இடிந்து விழுந்து விபத்து - ஒருவர் உயிரிழப்பு ,மூவர் காயம்!