சென்னையில் கரோனா வைரஸ் தடுப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் காவல் துறையினர் கரோனா தொற்றால் தொடர்ந்து பாதிக்கப்பட்டுவருகின்றனர். இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு கரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டதால், அவர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
சென்னை விமான நிலைய பெண் காவலருக்கு கரோனா! - கரோனா தொற்று பாதிப்பு
சென்னை: சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர் ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
பரிசோதனை முடிவில் இரண்டு காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இரண்டு காவலர்களும் சில நாள்களுக்கு முன்பு, பூரண குணமடைந்து மீண்டும் பணிக்குத் திரும்பினர்.
இந்நிலையில், சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர் ஒருவருக்கு கரோனா அறிகுறி தென்பட்டதால், அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. பின்னர், அவர் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.