தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மகளிர் தினம் - ஏர் இந்தியா விமானத்தை இயக்கிய பெண் விமானிகள்! - மகளிர் தினத்தை கொண்டாடும் பெண்கள்

சென்னை: மகளிர் தினத்தை முன்னிட்டு உள்நாட்டு விமானங்களை பெண்களே இயக்கினர்.

chennai airport
chennai airport

By

Published : Mar 8, 2020, 9:21 AM IST

சா்வதேச மகளிர் தினத்தையொட்டி, சென்னையிலிருந்து டில்லி, கோயம்புத்தூர், துபாய் ஆகிய மூன்று ஏா் இந்தியா விமானங்களை பெண்களே இன்று இயக்கின. இதில், சென்னை-டில்லி, சென்னை-கோவை, கோவை-சென்னை ஆகிய உள்நாட்டு விமானங்களாகும்.

விமானங்கள் காலை 6.10 மணிக்கு, சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து டில்லி புறப்பட்ட AI 440 விமானத்தை பெண் விமானிகள் ஆா்த்தி டி குா்னி,பிகே பிரித்திகா, விமான ஊழியா்கள் மீனாட்சி குந்தல், அரோரா ரீனா,பீா் கீதா,ரஸ்மி சுரானா,பிரியங்கா ஹிரிகன் ஆகியோா் இயக்கினர்.

அதேபோன்று, பகல் 1.20 மணிக்கு சென்னையிலிருந்து கோவை செல்லும் ஏா் இந்தியா விமானத்தை AI 429 விமானிகள் சோனியா ராணி ஜெயின், விரிண்டா நாயா், விமான ஊழியா்கள் கரீஷ்மா, சரிதா, ஜீனா, மாயா, சீட்நா ஜெ ஆகியோா் இயக்கவுள்ளனர்.

கோவையிலிருந்து மாலை 4 மணிக்குப் புறப்பட்டு மாலை 5 மணிக்கு சென்னை வரும் ஏா் இந்தியா விமானத்தை AI 539 பெண்களே இயக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: க. அன்பழகன் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய திமுகவினர்!

ABOUT THE AUTHOR

...view details