தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புறநகர் ரயில்களில் பெண்கள் பயணிக்கும் நேரம் அதிகரிப்பு!

சென்னை: டிசம்பர் 7ஆம் தேதிமுதல் புறநகர் ரயில்களில் பெண்கள் பயணிக்கும் நேரம் அதிகரிக்கப்பட உள்ளது.

By

Published : Dec 4, 2020, 7:31 PM IST

ரயில்
ரயில்

சென்னை புறநகர் மின்சார ரயில்களில் அத்தியாவசிய பணியாளர்கள் அல்லாத பெண்கள் பயணிக்கும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரயில்வே நிர்வாகம வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, "தெற்கு ரயில்வே சென்னை புறநகர் சிறப்பு ரயில்களின் கூட்ட நெரிசல் மிகுந்த நேரம் (peak hours), கூட்ட நெரிசல் இல்லாத நேரம் (non-peak hours) ஆகிய காலவரைவில் மாற்றம் செய்துள்ளது.

அதன்படி வரும் 2020 டிசம்பர் 7 (திங்கட்கிழமை) முதல், கூட்ட நெரிசல் மிகுந்த நேரமாக (Peak hours) காலை 7:00 மணி முதல் 09:30 மணி வரை (முன்பு 10:00 மணி வரை என இருந்தது) எனவும், மாலை 04:30 மணி முதல் இரவு 07:00 மணி வரை (முன்பு இரவு 07:30 மணி வரை என இருந்தது) எனவும் கால வரைவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதனால் பெண் பயணிகளும், அவர்களுடம் வரும் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் அதிகாலை முதல் காலை 9.30 வரை புறநகர் ரயில்களில் பயணம் செய்யலாம். அதேபோல், மாலை 04:30 மணி முதல் இரவு 07:00 மணி வரை பயணம் செய்யலாம். இதன்மூலம் காலையும், மாலையும் ரயிலில் பெண்கள் கூடுதல் நேரம் செல்ல அனுமதிக்கப்படுவர். ஞாயிற்றுக்கிழமைகளில் எல்லா நேரங்களிலும் பயணிக்க பெண் பயணிகள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

அத்தியாவசிய பணியாளர் பட்டியலின் கீழ் வராத பெண் பயணிகள் மாதாந்திர பயணச்சீட்டோ அல்லது அல்லது சாதாரண பயணச்சீட்டை கொண்டோ சிறப்பு புறநகர் ரயில்களில் பயணிக்கலாம். இவர்கள் கூட்ட நெரிசல் இல்லாத நேரங்களில் (non-peak hours) ரயில்களில் பயணிக்க சாதாரண பயணச்சீட்டை அந்தந்த ரயில் நிலையங்களிலேயே பெற்றுக்கொண்டு பயணிக்கலாம்.

12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை இந்த கூட்ட நெரிசல் இல்லாத நேரங்களில் தங்களுடன் பயணிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். திங்கள் முதல் சனிக்கிழமை வரை அத்தியாவசிய பணியாளர் பட்டியலில் வராத பெண் பயணிகள் காலை 07:00 – 09:00 மற்றும் மாலை 04:30 – இரவு 07:00 மணிவரை ஆகிய நேரங்களில் (peak hours) புறநகர் ரயில்களில் பயணிக்க அனுமதி கிடையாது.

மத்திய, மாநில அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் அத்தியாவசிய பணியாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் விதமாகவும், ரயில்களில் கூட்ட நெரிசலை குறைக்கும் வண்ணமாக, தெற்கு ரயில்வே, புறநகர் சிறப்பு ரயில்கள் சேவையை 244 -லிருந்து 320 ஆக அதிகரித்துள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்மூலம் கரோனா காலத்திற்கு முன் இயக்கப்பட்ட புறநகர் ரயில்களில் எண்ணிக்கையில் ஏறக்குறைய 50% ரயில்கள் மீண்டும் இயக்கப்படுகிறது.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details