சென்னை: எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவரும் பெண் காவலர் ஒருவர் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவரும் உதவி ஆய்வாளர் வர்மா மீது புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், உதவி ஆய்வாளர் தன்னை பாலியல் ரீதியாகப் பேசி, திட்டியதாகக் குறிப்பிடப்பட்டிருந்தார். அதன்பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில், பாதுகாப்புப் பணிக்குப் பெண் காவலர் நாள்தோறும் காலதாமதமாக வந்ததால் அதைக் கண்டிக்கும் வகையில் உதவி ஆய்வாளர் வர்மா திட்டினார் என்றும், பாலியல் ரீதியாகத் திட்டவோ பேசவோ இல்லை என்றும் தெரியவந்துள்ளது.
மேலும் உதவி ஆய்வாளர் வர்மாவும் தனது தரப்பு புகாரை உயர் அலுவலர்களிடம் அளித்துள்ளார். இருதரப்பினர் கொடுத்த புகாரின்பேரில் துறை ரீதியான விசாரணை நடைபெற்றுவருவதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:பணியிடமாற்றம் செய்யப்பட்ட காவலர்களுக்கு சுற்றறிக்கை