தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இ-சேவை மையத்தில் போலி முத்திரைகள் - பெண் நிர்வாகி கைது - crime report

சென்னையில் போலி கையெழுத்து தொடர்பாக தனியார் இ-சேவை மைய பெண் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

தனியார் இ-சேவை மைய பெண் நிர்வாகி கைது - சென்னையில் சிக்கியது எப்படி?
தனியார் இ-சேவை மைய பெண் நிர்வாகி கைது - சென்னையில் சிக்கியது எப்படி?

By

Published : Dec 15, 2022, 6:20 PM IST

சென்னை: குரோம்பேட்டை அரசு மருத்துவர் காமேஷ் பாலாஜி தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று (டிச.15) மாலை தாம்பரத்தில் இருந்து கிஷ்கிந்தா செல்லும் வழியில் உள்ள தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் அருகில் இருக்கும் தனியார் இ-சேவை மையத்தை, இன்ஸ்பெக்டர் சார்லஸ் தலைமையிலான காவல் துறையினர் சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு போலி முத்திரை இருந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அந்த மையத்தின் பெண் நிர்வாகியான மேற்கு தாம்பரம் கிருஷ்ணா நகரைச் சேர்ந்த சீனிவாசனின் மனைவி சசிகலா (36) என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் இந்த மையத்தில் பல போலி முத்திரைகளை பயன்படுத்தி, ஏராளமான மோசடி நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள சண்முகம் மற்றும் எலியாஸ் ஆகிய இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். முன்னதாக ஆதார் கார்டு விண்ணப்பிக்க வந்த மூதாட்டி ஒருவருக்கு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனை மருத்துவர் காமேஷ் பாலாஜியின் பெயரில் போலியாக கையெழுத்து போட்டும், போலி மருத்துவர் முத்திரையை பயன்படுத்தியும் மோசடியில் ஈடுபட்டதால், இந்த குற்றச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதையும் படிங்க:நாகை பாஜக நிர்வாகியின் கல்லூரியில் பாலியல் தொல்லை; வெளியான பகீர் ஆடியோ... நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details