தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

துணிச்சலுக்கு ஜெயலலிதா; தமிழ் உணர்வுக்கு கருணாநிதி - புகழ்ந்த தெலங்கானா ஆளுநர் - பாஜக தமிழ்நாடு தலைவர்

சென்னை: துணிச்சலில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா போலவும், தமிழ் உணர்வில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி போலவும் இருக்கவேண்டும் என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Tamilisai

By

Published : Sep 29, 2019, 5:10 PM IST

சென்னை தி.நகரில் கிருஷ்ண கானா சபாவில் சென்னை பப்ளிக் வெல்ஃபேர் சார்பாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

இதில் பாமக தலைவர் ஜி.கே. மணி, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், தமிழ்மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் ஞானதேசிகன், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், முன்னாள் அமைச்சர் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பல முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்று பாராட்டு உரை வழங்கினர்.

இதனைத்தொடர்ந்து, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பேசுகையில், "ஒரு கட்சியில் அரசியல்வாதியாக இருக்க வேண்டும் என்றால் கலவையாக ஒருவர் இருக்க வேண்டும் என்பது என் கருத்து. துணிச்சலில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா போலவும், தமிழ் உணர்வில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி போலவும், சமுதாய அக்கரையில் ராமதாஸ் போலவும், எளிமையாக பழகுவதில் விஜயகாந்த் போலவும், பேச்சாற்றலில் வைகோ போலவும் அனைத்து கலவையாகவும் இருக்க வேண்டும்" என்றார்.

தமிழிசைக்கு பாராட்டு விழா

மேலும் "பிற மொழிகளை கற்றுக்கொள்வதில் எவ்வித தவறும் இல்லை. ஒரு ஆளுநராக தெலுங்கானா மாநிலத்தின் வளர்ச்சிப் பணிகளில் என் தீவிர உழைப்பு நிச்சியமாக இருக்கும்" என்று தமிழிசை தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details