மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வரி வாரியம் வருகிற 2020ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் புதிய ஜிஎஸ்டி ரிட்டர்ன்ஸை அமல்படுத்தவுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு முழுவதுமுள்ள ஜிஎஸ்டி ஆணையரகங்களில், இன்று சிறு மற்றும் பெரிய தொழில் செய்யும் பங்குதாரர்களிடம் நேரடியாக கருத்து பதியும் கூட்டம் நடைபெற்றது.
ஜிஎஸ்டி ரிட்டர்ன்ஸை எளிமையான முறையில் பதிவு செய்வதற்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் வரி செலுத்துவோர், ஜிஎஸ்டி ஆலோசகர்கள், பட்டயக் கணக்காளர்கள், தொழில் மற்றும் வர்த்தக அமைப்பின் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் ஜிஎஸ்டி மற்றும் சுங்கவரி ஆணையரான ஜி. ரவீந்திரநாத் பங்கேற்று புதிய முறையில் வரி செலுத்துவதற்கானப் பயிற்சியை அளித்தார்.