அரசு மேல்நிலைப் பள்ளியில் சேர்க்கை நுழைவு படிவம் பெற ரூ.100 கட்டணம்! - சென்னை செய்திகள்
அரசு மேல்நிலைப் பள்ளியில் சேர்க்கை நுழைவு படிவம் பெற ரூ.100 கட்டணம் வாங்கிய காணொலி வெளியாகி பெற்றோர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்றானது நாளுக்கு நாள் குறைந்துவருவதால் தமிழ்நாடு அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துவருகின்றது. இந்த நிலையில் பள்ளி, கல்லூரிகளில் புதிய மாணவர்கள் சேர்க்கை நடைபெறுமென அரசு அறிவித்தது.
அதன்படி தனியார் பள்ளிகள், அரசுப் பள்ளிகள், கல்லூரிகள் புதிய கல்வி ஆண்டின் மாணவர் சேர்க்கையில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த நிலையில் சென்னை, பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் நகராட்சிக்குள்பட்ட அனகாபுத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை சேர்க்கை நடைபெற்றுவருகிறது.