சென்னை தாம்பரத்தில் இருந்து கடற்கரை வரை செல்லும் மின்சார ரயிலில் பழங்கள் விற்பது போல் கூடைக்குள் மறைத்து கஞ்சாவை மாணவர்களுக்கு ஒருவர் சப்ளை செய்து வந்தார். இதையறிந்த பயணிகள் அவரை பிடித்து ரயில்வே காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
மின்சார ரயிலில் கஞ்சா விற்பனை செய்தவரை பிடித்த பயணிகள் - Chennai latest news
சென்னை: குரோம்பேட்டை ரயில் நிலையத்தில் கையும் களவுமாக சிக்கிய கஞ்சா வியாபாரியிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
cannabis sale
பின்னர் ரயில்வே காவல் துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் கடலூரைச் சேர்ந்த பெரியசாமி(24)என்பதும், பழங்கள் விற்பனை செய்வதுபோல் மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்ததும் தெரியவந்தது. அவரிடம் இருந்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:ஐந்து கிலோ கஞ்சாவுடன் பெண் கைது