தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

என் மகளின் சாவுக்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட வேண்டும் - பாத்திமாவின் தந்தை - ஐஐடியில் தற்கொலை செய்து கொண்ட பாத்திமா

சென்னை: என் மகளின் சாவுக்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என ஐஐடியில் தற்கொலை செய்துகொண்ட பாத்திமாவின் தந்தை சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்தார்.

chennai-airport

By

Published : Nov 15, 2019, 2:10 PM IST

கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர் பாத்திமா லத்தீப். இவர் சென்னை ஐஐடியில் முதலாமாண்டு முதுகலை பட்டம் படித்துவந்தார். கடந்த சனிக்கிழமை பாத்திமா லத்தீப் தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தற்கொலை குறித்து காவல் துறையினர் விசாரித்து வரும் நிலையில் மன அழுத்தத்தால் மாணவி தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், இன்று சென்னை விமான நிலையம் வந்த பாத்திமாவின் தந்தை செய்தியாளர்களைச் சந்தித்தார்.

பாத்திமாவின் தந்தை

அப்போது அவர், தமிழ்நாடு முதலமைச்சர், "காவல் துறை தலைமை இயக்குநர் ஆகியோரை சந்தித்து பேசிய பின்னர் நான் உங்களிடம் அனைத்து விவரங்களையும் தெரிவிக்கிறேன். என் மகளின் சாவுக்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்பதே முதன்மை கோரிக்கை, இரண்டு மணிநேரத்திற்குப் பின்னர் சந்திக்கிறேன்" என்றார்.

இதையும் படிங்க: ஐஐடி மாணவி இறப்பில் நேர்மையான விசாரணை தேவை - முத்தரசன்

ABOUT THE AUTHOR

...view details