சென்னை: தனது தந்தையால் 8 ஆண்டுகளாக பாலியல் தொல்லைக்கு ஆளாகியுள்ளதாக சென்னையை சேர்ந்த 12 வயது சிறுமி தாயிடம் கூறியுள்ளார். கணவரின் நடந்தையை கண்டித்த மனைவி, காவல் துறையில் புகார் அளிக்கவில்லை. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட அந்த சிறுமியே கடிதம் மூலம் காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.
இதன் அடிப்படையில், சிறுமியின் தந்தை, தாய் மற்றும் மாமா ஆகியோர் மீது போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை மாவட்ட போக்சோ வழக்குகளுக்கான நீதிமன்ற நீதிபதி எம். ராஜலட்சுமி, சிறுமியின் தந்தைக்கு சாகும் வரை சிறை தண்டனையும், 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.