சென்னை, தாம்பரத்தை அடுத்த சிட்லபாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 45). இவருக்கு ஒன்பது வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில், சிறுமியின் தாய் கடைக்குச் சென்றிருந்த நேரத்தில், வீட்டில் தனியாக இருந்த தனது ஒன்பது வயது மகளுக்கு சங்கர் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.
மகளிடம் பாலியல் அத்துமீறல் : தந்தை சிறையில் அடைப்பு - father arrested
சென்னை : பெற்ற மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தந்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தொடர்ந்து, கடைக்குச் சென்று வீடு திரும்பியபோது தன் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கணவரைக் கண்டு சிறுமியின் தாய் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.
இதனையடுத்து சிறுமியின் தாய் சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் சிட்லபாக்கம் காவல் துறையினர் தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, தாம்பரம் அனைத்து மகளிர் காவல் துறையினர் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சங்கரைக் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.