சென்னை: ஐ.சி.எஃப் காஸ்டபிள் சாலை - டங்கன் சாலை சந்திப்பில் கடந்த மாதம் 26ஆம் தேதி மாலை இரு கல்லூரி மாணவர்கள் அமர்ந்து வந்த இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில் வாகனத்தை ஓட்டி வந்த பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த தனியார் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவன் ஒருவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
பின்னால் அமர்ந்து வந்த திரு.வி.க நகரை சேர்ந்த மற்றொரு தனியார் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவன் லோகேஷ் (18) தலையில் பலத்த காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். விபத்துச் சம்பவம் தொடர்பாக திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
குறிப்பாக இருசக்கர வாகனத்தில் பயணித்த இருவரும் 18 வயது நிரம்பாதவர்கள் எனவும், தலைக் கவசம் அணியாமல் அதிவேகமாக வாகனத்தை செலுத்தியதே விபத்துக்கு காரணம் எனவும் போக்குவரத்து போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவன் லோகேஷ் மூளைச் சாவு அடைந்ததாக தனியார் மருத்துவமனை அறிவித்தது.