சென்னை :திருவொற்றியூர் விம்கோ நகரை சேர்ந்தவர் வேணுகோபால் (43). இவர் நேற்று (செப்.10) எர்ணாவூர் ராமகிருஷ்ணா நகர் கடற்கரையில் தனது மனைவி திவ்யலதா, மகள் தனிகா (12), மகனுடன் குளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது யாரும் எதிர்பாராத விதமாக தனிகா கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டார். உடனடியாக வேணுகோபால் மகளைக் காப்பாற்ற முயற்சி செய்து கடலுக்குள் சென்றார்.
ஆனால் இருவரையும் கடல் அலை இழுத்து சென்றது. இதைப் பார்த்த திவ்யலதாவின் கூச்சல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து கடலில் சிக்கிய வேணுகோபால் மற்றும் தனிகாவை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.