தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மகன், மருமகளை அரிவாளால் வெட்டிய தந்தை சிறையில் அடைப்பு - Father Arrested for Son, daughter in law cut with scythe

சென்னை: பொழிச்சலூரில் தகராறு காரணமாக மகன், மருமகளை அரிவாளால் வெட்டிய தந்தையை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மகன், மருமகளை அரிவாளால் வெட்டிய தந்தை கைது
மகன், மருமகளை அரிவாளால் வெட்டிய தந்தை கைது

By

Published : May 5, 2021, 10:55 PM IST

சென்னை பொழிச்சலூர் அடுத்த விநாயகர் நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (70). இவருக்கு முருகன், ராஜேந்திரன் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்.

இவர்களுக்கு சொந்தமான கிணற்றில் தண்ணீர் எடுப்பது தொடர்பாக முருகன், அவரது தந்தை சுப்பிரமணியன் ஆகியோர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று (மே.5) மீண்டும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது தந்தை சுப்பிரமணியன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மகன் முருகனை சரமாரியாக வெட்டினார். அப்போது தடுக்க முயன்ற மருகனின் மனைவி மாரிச்செல்வி (40) கையிலும் வெட்டு விழுந்தது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக சங்கர் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பலத்த காயம் அடைந்த இருவரையும் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சுப்பிரமணியனை கைது செய்த காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: சட்டப்பேரவைத் தேர்தல்களில் பெண் வேட்பாளர்கள் ஏன் அதிகளவில் முன்னிறுத்துவதில்லை?

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details