சென்னை ஆதம்பாக்கம் பாலாஜி நகர், 6ஆவது தெருவில் அடுக்குமாடிக் குடியிருப்பில் இரண்டாவது தளத்தில் வசித்துவருபவர் பாரி (என்கிற) பரிமளம் (47). இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துவந்தார். இவரது மனைவி ராஜபாலம்பிகா (42), சைதாப்பேட்டையில் உள்ள ஆர்க்கிடெக் நிறுவனத்தில் வேலை பார்த்துவருகிறார். கருத்து வேறு பாடு காரணமாக, கணவரைப் பிரிந்து, ஆதம்பாக்கம், இன்கம்டாக்ஸ் காலனியில் தனியாக வசித்துவருகிறார். இவர்களது மகன் பாலமுருகன் (10), தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்துவந்தான்.
இந்நிலையில், நேற்று (டிசம்பர் 14) மாலை பரிமளம் வீட்டிலிருந்து திடீரென புகை வந்துள்ளது. இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் ஓடிச் சென்று பார்த்தபோது, வீட்டிற்குள் நெருப்பு கொளுந்துவிட்டு எரிந்துகொண்டிருப்பதைப் பார்த்துள்ளனர். தகவலறிந்து விரைந்தவந்த கிண்டி, வேளச்சேரி தீயணைப்பு வீரர்கள், தீயைக் கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தனர்.
ஆனால், அதற்குள் தந்தை, மகன் இருவரும் தீயில் கருகி உயிரிழந்தனர். உடலைக் கைப்பற்றிய ஆதம்பாக்கம் காவல் துறையினர், உடற்கூராய்வுக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதையடுத்து, தடயவியல் உதவி இயக்குநர் சோபியா வரவழைக்கப்பட்டு ஆய்வுமேற்கொள்ளப்பட்டது.
இது குறித்து காவல் துறை தரப்பில், "புதுச்சேரியைச் சேர்ந்தவர் பரிமளம், கடலூரைச் சேர்ந்தவர் ராஜபாலாம்பிகா. இருவரும் ஒரே அலுவலகத்தில் வேலை பார்த்தனர். அப்போது, பழக்கம் ஏற்பட்டு இருதரப்பு வீட்டாரும் பேசி, 12 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. பரிமளம் சந்தேக புத்தி கொண்டவர். குடிப்பழக்கமும் உண்டு.