கடந்த மூன்று மாத காலமாக, வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராடிவருகின்றனர். இதற்கிடையே, குடியரசு தினத்தன்று நிகழ்ந்த விவசாயிகளின் டிராக்டர் பேரணியின் போது வன்முறை வெடித்தது. செங்கோட்டைக்கு சென்ற சில போராட்டக்காரர்கள், சீக்கியர்களின் மத கொடியை ஏற்றினர்.
போராடுபவர்களை வன்முறையாளர்கள் என குறிப்பிடும் தனியார் பள்ளி - டிஎம் கிருஷ்ணா - கர்நாடக இசைக்கலைஞர்
சென்னை: போராட்டத்தில் ஈடுபடுபவர்களை வன்முறையாளர்கள் என பத்தாம் வகுப்பு வினாத்தாளில் தனியார் பள்ளி குறிப்பிட்டிருப்பதாக கர்நாடக இசைக் கலைஞர் டிஎம் கிருஷ்ணா வேதனை தெரிவித்துள்ளார்.
இது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், போராட்டத்தில் ஈடுபடுபவர்களை வன்முறையாளர்கள் என பத்தாம் வகுப்பு வினாத்தாளில் தனியார் பள்ளி ஒன்று குறிப்பிட்டிருப்பதாக கர்நாடக இசைக் கலைஞர் டிஎம் கிருஷ்ணா வேதனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "சென்னையில் உள்ள புகழ்பெற்ற பள்ளியின் பத்தாம் வகுப்பு வினாத்தாளின் மாதிரி இது. இச்சம்பவம் குறித்தும் வேளாண் திருத்தச் சட்டங்கள் குறித்தும் விவாதம் நடைபெற்றுவரும் நிலையில், வெளியாட்களின் தூண்டுதலின் பெயரில் வன்முறை வெறியாட்டம் நிகழ்ந்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது" என பதிவிட்டுள்ளார்.