தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் போராட்டம்! - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

சென்னை: தாம்பரத்தில் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் சட்ட நகலை எரித்து போராட்டம் நடத்தினர்.

Farmers peotest
agriculture laws

By

Published : Jun 5, 2021, 1:09 PM IST

நாடு முழுவதும் மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி பல்வேறு இடங்களில் நகல் எறிப்புப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அதனைத் தொடர்ந்து, சென்னை தாம்பரம் பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சண்முகம் தலைமையில் விவசாய சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.

அப்போது வேளாண் சட்டங்களின் நகல்களை தீயில் எரித்து ஒன்றிய அரசை கண்டித்து கோஷமிட்டனர். அப்போது, அங்கிருந்த காவல் துறையினர், அதனை தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.

இதையடுத்து, வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறாவிட்டால் கரோனா பேரிடர் தனிந்த பிறகு அனைத்து விவசாயிகளையும் ஒன்று திரட்டி நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டம் நடத்த போவதாகத் தெரிவித்தார்.

மேலும், கிராம மலைவாழ் மக்களுக்கு கரோனா மருத்துவ வசதிகள் சென்றடையவில்லை என்றும் அதற்கான ஏற்பாடுகளை அரசு உடனடியாக செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

ABOUT THE AUTHOR

...view details