சென்னை: சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 22) நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடர் கேள்வி நேரத்தில் மடத்துக்குளம் உறுப்பினர் மாகேந்திரன் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, "தமிழ்நாடு முழுவதும் மின் இணைப்புகளின் எண்ணிக்கையை சீரமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக கரூர், தஞ்சாவூர், திருவண்ணாமலையில் புதிய மூன்று மண்டலங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.
ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் இதுவரை 87,465 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கும் பணிகள் இம்மாத இறுதிக்குள் நிறைவு செய்யப்படும்.