நடிகர் ரஜினிகாந்த் கடந்த வாரம் அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்துகொள்ள ஹைதராபாத் சென்றார். அப்போது, படக்குழுவினர் சிலருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், ரஜினிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 27 ஆம் தேதி மாலை சிகிச்சை முடிந்து அவர் சென்னைக்கு திரும்பினார்.
ரஜினி அறிவிப்பு
முன்னதாக மருத்துவர்கள் ரஜினியை ஓய்வில் இருக்குமாறு அறிவுறுத்தினர். இதனால், தாம் கட்சி தொடங்கப்போவதில்லை என இன்று அறிவித்திருக்கிறார். தனது உடல்நிலையை காரணம் காட்டி தனது அரசியல் நிலைப்பாட்டில் இருந்து ரஜினி பின்வாங்கிவிட்டார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் திரை பிரபலங்களும் ஆதரவு அளித்த நிலையில், அவரது ரசிகர்களும் அரைமனதோடு ரஜினியின் முடிவுக்கு சம்மதம் தெரிவித்தனர்.
ரசிகர்கள் தர்ணா
ஆனால், இதனை ஏற்றுக்கொள்ள முடியாத அவரது ரசிகர்கள் சிலர், சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினியின் வீட்டின் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ரஜினியின் முடிவு தங்களுக்கு வருத்தம் அளிப்பதாகவும், முடிவை கைவிட்டு அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்றும் முழக்கமிட்டனர்.
இதையும் படிங்க:கட்சி இல்லை என்ற ரஜினி அறிவிப்பு குறித்து செய்தியாளர்கள் கலந்துரையாடல்