சென்னை:ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், ரேகா, எம்எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் பேய் மாமா. திகில் கலந்த காமெடி படமாக உருவாகியுள்ள இப்படம் இன்று (செப்.24) வெளியாகியது. இந்த படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரேகாவிற்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து நடிகை ரேகா பகிர்ந்துள்ள தகவலில், "நான் ‘கடலோரக்கவிதை’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமான போது எப்படி வரவேற்று உற்சாகப்படுத்தினீர்களோ, அதே போல திருமணத்திற்கு பிறகு கேரக்டர் ஆர்டிஸ்டாக நடிக்க வந்த போதும், அதே உற்சாகத்தையும் மரியாதையையும் கொடுத்து வரவேற்றீர்கள்.
என்னுடைய திரை வாழ்க்கையின் வளர்ச்சியிலும், முன்னேற்றத்திலும் காரணமாக இருந்து வருகிறீர்கள். உங்களின் ஒத்துழைப்புக்கும், மரியாதைக்கும் நன்றி.
தியேட்டரில் சிரித்து மகிழ்ந்தனர்
இப்போது ‘பேய் மாமா’ படத்தில் நகைச்சுவை பாத்திரத்தில் நான் நடித்திருப்பதைக் கண்டு பலர் என்னை தொடர்பு கொண்டு பாராட்டி, தியேட்டரில் சிரித்து மகிழ்ந்த தகவலை பகிர்ந்து கொண்ட போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.