கோவை - திருச்சி சாலையில் 'ராமநாதபுரம் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்' எதிரே 'சாம்ஸ் ஜிம்' என்ற புதிய உடற்பயிற்சி கூடத்தின் திறப்பு விழா இன்று நடந்தது. இதில், ஐந்து முறை ‘மிஸ்டர் இந்தியா’ பட்டம் வென்றவரும், திரைப்பட நடிகருமான காமராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். விழாவில் டெல்டா ஸ்க்வாட் காமண்டர் ஈசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
அப்போது, ஒவ்வொருவரும் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதன் அவசியத்தையும், உணவு பழக்கத்தையும், உள்ளத்தை ஒருங்கிணைக்கும் உடற்பயிற்சிகளின் பயன்கள் குறித்தும் நடிகர் காமராஜ் விளக்கினார்.