தமிழ்த் திரையுலகில் நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு மக்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்திருப்பவர் நடிகர் விஜய்சேதுபதி. இவரது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜய்சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கத்தின் சார்பாக மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், குழந்தையின்மை, அக்குபஞ்சர் ஆகிய நோய்களுக்கான பரிசோதனைகளும், ரத்ததான முகாமும் நடைபெற்றது.
இந்த விழாவின் சிறப்பம்சமாக அகர்வால் மருத்துவமனையுடன் இணைந்து கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் 7 பேருக்கு இலவசமாக கண் சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.