சென்னை:பூவிருந்தவல்லியில் தமிழர் குடிகள் கூட்டமைப்பு சார்பில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் திராவிட ஒழிப்பு மாநாடு என்ற பெயரில் கூட்டம் நடத்த திரண்டனர். கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்காத நிலையில், மாநாட்டில் கலந்து கொள்ள வந்த சுமார் 500க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
திராவிடம் ஒழிப்பு மாநாடு.. யூடியூப் புகழ் பாரிசாலன் உள்பட 500 பேர் கைது! - famous you tuber Paari Saalan arrest
Paari Saalan arrest : பூவிருந்தவல்லியில் திராவிட ஒழிப்பு மாநாடு என்ற பெயரில் கூட்டம் நடத்த திரண்ட யூடியூபர் பாரிசாலன் உள்பட 500க்கும் மேற்பட்டோரை முன் அனுமதி பெறாமல் போராட்டம் நடத்த திரண்டதாக கூறி போலீசார் கைது செய்தனர்.
Published : Aug 28, 2023, 7:32 AM IST
|Updated : Aug 28, 2023, 8:03 AM IST
3 பேருந்துகள் மற்றும் காவல்துறை வாகனங்களில் அனைவரும் கைது செய்யப்பட்ட நிலையில், யூடியூப் புகழ் பாரிசாலனும் இதில் கைது செய்யப்பட்டார். காவல் துறையினரிடம் முன் அனுமதியின்றி கூட்டம் நடத்த முயற்சித்ததால் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க:அசாமில் தூங்கிக்கொண்டிருந்த தம்பதி கொடூரமாக கொலை.. போலீஸ் தீவிர விசாரணை!