தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடும்பத்தகராறால் மனைவியை கொலை செய்தாரா கணவர்? போலீசார் விசாரணை - சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை: பூந்தமல்லி அருகே குடும்பத்தகராறால் மனைவியின் கழுத்தை நெரித்து கணவன் கொலை செய்தாரா? என்ற சந்தேகத்தின்பேரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மனைவியின் கழுத்தை நெரித்து கணவன் கொலை செய்தாரா?
மனைவியின் கழுத்தை நெரித்து கணவன் கொலை செய்தாரா?

By

Published : Nov 19, 2020, 7:42 PM IST

சென்னை பூந்தமல்லி ரைட்டர் தெருவைச் சேர்ந்தவர்கள் நூர்தீன்-அசினா பேகம் தம்பதி. இவர்களுக்கு அல்டாப் என்ற மகனும், மகள் ஒருவரும் உள்ளனர். நூர்தீன் பெட்ரோல் பங்கில் வேலை செய்துவருகிறார்.

மகன் அல்டாப் வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது தாய் அசினா பேகம் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். இந்நிலையில், அவரை அல்டாப் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார். மருத்துவர்கள் அசினா பேகம் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இது குறித்து தகவலறிந்து வந்த பூந்தமல்லி காவல் துறையினர் சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். உடற்கூராய்வில் அசினா பேகம் கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே இவரது கணவர் நூர்தீன் தலைமறைவானர். காவல் துறையினர் முதற்கட்ட விசாரணையில் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு வந்துள்ளது. இதனால் அசினா பேகம் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது. தற்போது காவல் துறையினர் தலைமறைவாக உள்ள நூர்தீனை தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவன்

ABOUT THE AUTHOR

...view details