சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள கல்லூரி சாலையில் வசிக்கும் சுனில் குமார் ஹாண்டா (52) என்பவரின் மகன் தனப் ஹாண்டா. இவருக்கு அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் மாகாணத்தில் உள்ள ஹார்வார்டு பல்கலைக்கழக கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பதற்கு இடம் வாங்கித் தருவதாக, 2018ஆம் ஆண்டு சுனில் குமார் ஹாண்டாவிற்கு தெரிந்த ராஜசேகரன் என்பவர் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து ராஜசேகர் என்பவர் அக்ஷயா அஸ்வந்தி, அவரது தந்தை செம்பையா விஸ்வநாதன், அவரது தாய் தர்சினி ஆகியோரையும் அறிமுகப்படுத்தியுள்ளார். அப்போது அக்ஷயா அஸ்வந்தி என்பவர் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஜர்னலிசம் படித்து வருவதாக கூறியுள்ளார்.
இதனை நம்பி சுனில் குமார் ஹாண்டா தனது மகனுக்கு ஹார்வார்டு பல்கலைக்கழக கல்லூரியில் சீட்டு வாங்கித்தருவதற்காக அவர்களிடம் 58 லட்சத்து 40 ஆயிரத்து 800 ரூபாய் கொடுத்துள்ளார். ஆனால் அவர்கள் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பெயரில் போலியான ரசீதுகளை தயாரித்து கொடுத்து ஏமாற்றியுள்ளனர்.