தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் என்கவுண்டரில் கொல்லப்பட்ட 2 ரவுடிகள்.. உடலை வாங்க குடும்பத்தினர் மறுப்பு.. நடந்தது என்ன? - உடலை வாங்க குடும்பத்தினர் மறுப்பு

Rowdies Encounter in Chennai: சென்னையில் என்கவுண்டரில் கொல்லப்பட்ட இரண்டு ரவுடிகளின் உடல்களை வாங்க அவர்களது குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 13, 2023, 4:38 PM IST

சென்னை:ஆவடி காவல் ஆணையராக எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் அதிமுக பிரமுகர் பார்த்திபன் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகளான கூலிப்படை தலைவன் முத்து சரவணன் மற்றும் அவரது கூட்டாளி சதீஷ் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். இந்த நிலையில், நேற்று இரண்டு ரவுடிகளையும் போலீசார் பிடிக்க முற்பட்டபோது துப்பாக்கியால் போலீசாரை தாக்க முயற்சித்துள்ளனர். இதனால், போலீசார் எதிர் தாக்குதல் நடத்தியதில் இரண்டு ரவுடிகளும் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இருவரின் உடல்களையும் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால், உயிரிழந்தவர்களின் குடும்பத்தார் இருவரின் உடல்களையும் வாங்காமல் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆவடி காவல் ஆணையர் சங்கர் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினார். மேலும், ரடிகள் தாக்கியதில் காயம் அடைந்த மூன்று காவலர்களை மருத்துவமனைக்கு சென்று டிஜிபி சங்கர் ஜிவால் நலம் விசாரித்தார். இந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பாக பொன்னேரி ஆர்டிஓ கௌசல்யா தலைமையில் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதையடுத்து அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் பொன்னேரி ஆர்டிஓ மற்றும் வட்டாட்சியர் விசாரணை செய்தனர். இதனைத்தொடர்ந்து, பொன்னேரி கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு நேரடியாக சென்று இருவர் உடல்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

உடல்களை பெற மறுப்பு; சிபிஐ விசாரிக்க கோரிக்கை:இந்த நிலையில், தனது மகன் என்கவுண்டர் செய்யப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்றி உரிய விசாரணை செய்ய வேண்டும் என முத்து சரவணனின் தந்தை அவரது உடலை வாங்க மறுத்து மருத்துவமனைக்கு வராமல் வீட்டில் இருந்து வருகிறார். இதனால், போலீசார் தரப்பில் முத்து சரவணன் சகோதரி அயனாவரத்தில் வசித்து வருபவருக்கு உடலை மருத்துவமனைக்கு வந்து வாங்க வேண்டும் என போலீசார் தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

அதேபோல் மற்றொரு ரவுடி சதீஷின் உடலை வாங்க அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு வரவில்லை. அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர். அவர்களிடம் உடலை வாங்குவதற்கு கோட்டாட்சியர் கௌசல்யா, வட்டாட்சியர் மதிவாணன் ஆகியோர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:சென்னை என்கவுண்டர்; ஆர்டிஓ முன்னிலையில் உடற்கூறு ஆய்வு செய்ய திட்டம்!

ABOUT THE AUTHOR

...view details