தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனது பெயரில் போலி ட்விட்டர் கணக்கு: வைகோ சார்பில் புகார் மனு - mdmk vaiko

சென்னை: தனது பெயரில் போலி ட்விட்டர் கணக்கு தொடங்கி அவதூறு பரப்பப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் வைகோ புகார் அளித்துள்ளார்.

வைகோ
வைகோ

By

Published : Jun 24, 2020, 6:29 PM IST

மதிமுக பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், சமூக வலைத்தளத்தில் தனது பெயரில் போலி கணக்குகள் தொடங்கி தனக்கும் தன் கட்சிக்கும், தனது தோழமை கட்சிகளுக்கும் களங்கம் கற்பிக்கும் வகையிலும் அவதூறு பரப்பும் வகையிலும் பதிவிட்டு வருபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புகார் மனுவை வைகோ சார்பில், மதிமுக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த நன்மாறன், சுரேஷ் ஆகியோர் சென்னை காவல் ஆணையரை நேரில் சந்தித்து அளித்தனர். புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையினர், தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புகார் அளிக்கப்பட்ட இரண்டு நாள்களில் சமூக வலைதளத்தில் போலி கணக்குகள் முடக்கப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details