சென்னை அமைந்தகரை, பிள்ளைத்தோட்டம் பகுதியைச் சேர்த்தவர் ஆனந்தன்(24). இவர் அதே பகுதியில் தன்னை சாமியார் என்று சொல்லிக்கொண்டு திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணமாக சிறப்பு பூஜைகள் செய்து வந்துள்ளார்.
கலசத்திலிருந்து நகைகளை வெளியே எடுக்கக்கூடாது - போலி சாமியார் - jewelry theft issue in chennai
சென்னை: திருமணமாகாத பெண்களுக்கு சிறப்பு பூஜை செய்வதாகக் கூறி நூதனமுறையில் நகைகளை திருடும் போலி சாமியார் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
fake-preacher
இந்நிலையில் பூஜை செய்யும் இவர், வீட்டில் இருப்பவர்களிடம் அவர்களின் தங்க நகைகளை எடுத்துவர சொல்லி பூஜை செய்து, அதை கலசத்தில் அடைத்து, 21 நாட்களுக்கு நகைகளை வெளியில் எடுக்கக் கூடாது என கூறிவிட்டு அந்த நகைகளை நூதன முறையில் திருடி சென்றுள்ளார்.
இதையறிந்த, பொதுமக்கள் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஆனந்தன், அமைந்தகரை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகிறார்.