சென்னை திருமுல்லைவாயில் அருகே உள்ள அயப்பாக்கத்தில் போலீஸ் எனக் கூறி தன்னிடமிருந்த ஆயிரம் ரூபாயை பறித்து சென்றதாக பழைய இரும்புக்கடை வியாபாரி ராமசந்திரன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து காவல்துறையினர் போலீஸ் பாணியில் சுற்றித் திரிந்த நபரை மடக்கிப் பிடித்தனர்.
மாமுல் வேட்டையில் ஈடுபட்ட கள்ள போலீஸ் கைது..! - Mamul, claiming to be Chennai police
சென்னை: அயப்பாக்கத்தில் சாலையோரக் கடைகளில் போலீஸ் எனக் கூறி மாமுல் வேட்டையில் ஈடுபட்ட கள்ள போலீசை காவல்துறையினர் கைது செய்தனர்.
அவரிடம் விசாரணை செய்ததில் அயப்பாக்கத்தை சேர்ந்த ஜெயப்பிரகாஷ்(49) என்பதும் போலீஸ் போன்றே சீருடை அணிந்து, சிறுவர்கள் விளையாட பயன்படுத்தப்படும் வாக்கி டாக்கி வைத்துக் கொண்டு சாலையோரமாக உள்ள கடைகளில் பணம் பறித்து வந்ததும் தெரியவந்தது.
ஜெயபிரகாஷை கைது செய்த காவல்துறையினர் அவரிடமிருந்து போலி அடையாள அட்டை, வாக்கி டாக்கி, காவலர் சீருடை, காவலர் அணியும் பெல்ட் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: பணியில் இருந்த காவலரை தாக்கிய இருவர் கைது!