தமிழ்நாட்டில் சமீப காலமாக அதிக அளவில் போலி கடவுச்சீட்டு மூலம் சிலர் வெளிநாடுகளுக்கு செல்ல முயன்றாதாக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
சென்னை விமான நிலையத்தில் சமீபத்தில் போலி கடவுச்சீட்டு மூலம் வெளிநாடுகளுக்கு செல்ல முயன்ற 50-க்கும் மேற்பட்டோரைசுங்கத்துறையினர் பிடித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் க்யூ பிரிவு காவல் துறையினர் இந்த வழக்கை தனியாக விசாரித்துவருகின்றனர். இதில் தொடர்புடைய 40 பேரை பிடித்து விசாரணைநடத்தினர். இதில் திருச்சியைச் சேர்ந்த கலையரசி என்ற பெண் மூளையாக இருந்து செயல்பட்டது க்யூ பிரிவு காவல் துறையினருக்கு தெரியவந்தது.
அவருக்கு உதவியாக திருச்சி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் செயல்பட்டது அம்பலமானது. போலி கடவுச்சீட்டை தயாரிப்பதற்கு கிருபா, நிமலன், உதயகுமார் உள்ளிட்ட நான்கு பேர் உட்பட இலங்கையைச் சேர்ந்த 13 பேரை க்யூ பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.