தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊரடங்கில் போலி அனுமதி சீட்டுடன் பயணம்: 94 பேர் மீது வழக்கு - fake pass issue in chennai

சென்னை: ஊரடங்கில் அவசர பணிக்கு செல்வதாக வாகனங்களில் போலி ஸ்டிக்கர் ஒட்டி சென்ற 94 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது.

fake-pass-issue-in-curfew
fake-pass-issue-in-curfew

By

Published : Jul 2, 2020, 10:57 AM IST

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவல் நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. குறிப்பாக சென்னையில் கரோனா பரவல் பூதாகமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அதனால் சென்னையில் ஜூன் 19ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்த முழு ஊரடங்கில் கடுமையான நடவடிக்கைகள் பின்பற்றபடும் என காவல் ஆணையர் விஸ்வநாதன் எச்சரித்திருந்தார்.

இந்த நிலையில் சென்னை காவல்துறை, அவசரப் பணிகளுக்குச் செல்வதாக பத்திரிகைத்துறை, காவல்துறை, மாநகராட்சி, கரோனா தடுப்பு அலுவலர்கள் என போலியாக வாகனங்கள் அனுமதி சீட்டினை ஒட்டிச் சென்ற 94 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 14 நாள்களில் மட்டும் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 84 ஆயிரத்து 355 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டும், அவர்களிடமிருந்து 70 ஆயிரத்து 726 வாகனங்கள் பறிமுதலும் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக நேற்று (ஜூன் 1) மட்டும் 7 ஆயிரத்து 301 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதுதொடர்பாக 5 ஆயிரத்து 226 வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டன.

இதையும் படிங்க:சென்னை மக்களிடம் அத்துமீறிய காவலர்களின் பட்டியல் தயார்!

ABOUT THE AUTHOR

...view details