தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போலிப்பட்டியல் தயார் செய்த சிமெண்ட வணிகரின் மோசடி அம்பலம் - போலிப்பட்டியல்

திருநெல்வேலியைச் சேர்ந்த சிமெண்ட் விற்பனை செய்யும் வணிகர், போலிப்பட்டியல் தயாரித்து மோசடியாக உள்ளீட்டு வரி வரவை மாற்றி வருவது வணிகவரி ஆணையத்தின் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

நெல்லை சிமெண்ட் வியாபாரி வரி ஏய்ப்பு
நெல்லை சிமெண்ட் வியாபாரி வரி ஏய்ப்பு

By

Published : Jul 9, 2021, 10:56 AM IST

சென்னை: போலிப்பட்டியல்கள் தயார் செய்து , வரி ஏய்ப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.

இதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட புலனாய்வின்போது, திருநெல்வேலி கோட்டத்திற்குட்பட்ட சிமெண்ட் விற்பனை செய்யும் வணிகர் ஒருவர், சரக்குகளை (பழ)வழங்காமல் , போலிப்பட்டியல்கள் மூலம் பயனாளருக்கு மோசடியாக உள்ளீட்டு வரி வரவை மாற்றுவது தெரியவந்தது .

11 இடங்களில் ஆய்வு

அதனடிப்படையில், வணிகவரி ஆணையரின் ஆணையின்படி , திருநெல்வேலி மாநிலவரி நுண்ணறிவுப்பிரிவு இணை ஆணையர் மேற்பார்வையில், போலிப்பட்டியல்கள் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட வணிகரின் 11 வியாபார இடங்களில், சரக்கு மற்றும் சேவைவரிச் சட்டத்தின்கீழ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வின்போது சிமெண்ட் விற்பனை செய்யும் மேற்கூறிய வணிகர் , பலகோடி ரூபாய் மதிப்பிலான விலைப்பட்டியல்களை திருநெல்வேலி பகுதியை சார்ந்த கட்டிடம் மற்றும் சாலை ஒப்பந்தப்பணிதாரர்களுக்கு அளித்து, அவர்கள் போலி உள்ளீட்டு வரி மூலம் பயனடைய செய்துள்ளது தெரிய வந்தது.

போலிப்பட்டியல் தயாரித்த வணிகர் உள்ளிட்டோர் மீது சரக்கு மற்றும் சேவைவரிச் சட்டத்தின்கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான புலனாய்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: கரோனா தடுப்பூசிகளை ஒன்றிய அரசு விரைந்து வழங்க வேண்டும் - உதயநிதி ஸ்டாலின் பேச்சு

ABOUT THE AUTHOR

...view details