தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவல் அலுவலர்கள் பெயரில் போலி முகநூல் தொடக்கம்: குற்றவாளிகள் குறித்து விசாரணை! - போலி முகநூல் தொடக்கம்

சென்னை: காவல் அலுவலர்களின் பெயரில் போலி முகநூல் தொடங்கப்பட்டு, பணம் பறித்த கும்பல் கண்டறியப்பட்ட நிலையில் அவர்களைக் கைது செய்யும் பணியில் தீவிரம் காட்டிவருகின்றனர்.

காவல் அலுவலர்கள் பெயரில் போலி முகநூல் தொடக்கம்
காவல் அலுவலர்கள் பெயரில் போலி முகநூல் தொடக்கம்

By

Published : Sep 21, 2020, 7:51 PM IST

குற்றச் செயல்களில் ஈடுபட்டு, வழக்குகள் மூலம் கண்டறியப்பட்ட இளம் சிறார்களின் திறனறிந்து, அவர்களின் எதிர்காலத்துக்கு வழிவகை செய்யும் நிகழ்ச்சி இன்று (செப்.21) கிண்டி தொழிற்பேட்டையிலுள்ள மாநில தொழிற்நெறி வழிகாட்டு மையத்தில் நடைபெற்றது.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை, சென்னை பெருநகர காவல் துறையினர் ஆகியோர் இணைந்து நடத்தும் நான்கு நாள்கள் பயிற்சியில் 35 மாணவர்கள் கலந்துகொண்டனர். இந்தப் பயிற்சியின்போது மாணவர்களின் திறன் அறிந்து, அவர்களுக்கு உயர்கல்வி, தொழிற்கல்வி அல்லது உரிய வேலைவாய்ப்புகள் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் கூறுகையில், “முதற்கட்டமாக அடையாறு பகுதியில் நடத்தப்படும் நிகழ்ச்சி, படிப்படியாக சென்னையின் அனைத்துப் பகுதிகளிலும் நடத்தப்படும்” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “காவல் உயர் அலுவலர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி, பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் வங்கிக் கணக்குகள் கண்டறியப்பட்டுள்ளது.

சமீப நாள்களாக பிரபலங்கள், காவல் அலுவலர்கள், அவர்களின் உறவினர்கள் உள்ளிட்டோரின் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி மோசடி கும்பல் ஒன்று, அவசர தேவை எனக் கூறி அலுவலர்களின் உறவினர்கள், நண்பர்களிடம் பணம் அனுப்புமாறு கோரிக்கை விடுத்து, மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை பெருநகர காவல் ஆணையர் கூடுதல் ஆணையர் பெயரிலும் போலி முகநூல் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற மோசடி நடைபெற்று வருவதால், இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. அதில், மோசடி கும்பலின் வங்கி கணக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும், கரோனா காலம் என்பதாலும், குற்றவாளிகள் பிற மாநிலங்களில் இருப்பதாலும் அவர்களைப் பிடிக்க கால அவகாசம் தேவைப்படுகிறது” என்றார்.

இதையும் படிங்க: 2 மாதத்தில் 200 பேர் மீது மணல் கடத்தல் வழக்கு: காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன்

ABOUT THE AUTHOR

...view details