தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

500 ரூபாய்... அரை மணி நேரத்தில் கரோனா நெகட்டிவ் சான்றிதழ் - மோசடி இளைஞர் கைது - corona negative certificate for 500 rupees

வெளிநாடு செல்லும் விமானப் பயணிகளிடம் 500 ரூபாய் பெற்றுக்கொண்டு, போலி கரோனா நெகட்டிவ் சான்றிதழ் தயாரித்துக்கொடுத்த, இளைஞரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

மோசடி இளைஞர் கைது
மோசடி இளைஞர் கைது

By

Published : Oct 20, 2021, 5:25 PM IST

சென்னை:மண்ணடி தம்பு செட்டி தெருவில் ஹாரிஸ் பர்வேஸ் (30) என்பவர் மருத்துவ பரிசோதனை மையம் நடத்தி வருகிறார். இவரது மையத்தில் கரோனா பரிசோதனையும் செய்யப்படுகிறது.

இந்நிலையில் பர்வேஸ் நடத்தி வரும் பரிசோதனை மையத்தின் பெயரில், போலி கரோனா சான்றிதழ் வழங்கப்படுவதாக பர்வேஸுக்கு தகவல் கிடைத்தது.

இது தொடர்பாக வாட்ஸ் ஆப்பில் பரவிய விளம்பரத்தையும் அவர் பார்த்துள்ளார். அந்த விளம்பரத்தில் விமான பயணிகளுக்கு 500 ரூபாய் கட்டணத்தில் உடனடியாக கரோனா பரிசோதனை சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மோசடி இளைஞர் கைது

அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த எண்ணுக்கு பர்வேஸ் வாட்ஸ் ஆப் செய்து, 500 ரூபாய் பணத்தை கூகுள்பே மூலம் அனுப்பி உள்ளார். இதையடுத்து உடனடியாக பர்வேஸின் எண்ணுக்கு கரோனா நெகட்டிவ் சான்றிதழ் வந்துள்ளது.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர், பூக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அதன் பேரில் சைபர் கிரைம் காவல்துறையினர் விளம்பரத்தில் குறிப்பிட்ட எண்ணை வைத்து தேடியுள்ளனர். மோசடியில் ஈடுபட்டவர் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த இன்பர்கான் (29) என்பது தெரிய வந்தது.

போலி கரோனா நெகட்டிவ் சான்றிதழ்

அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில், கடந்த ஆறு மாதங்களாக தனது நண்பர் உதவியுடன் மோசடியில் ஈடுபட்டதாக இன்பர்கான் கூறியுள்ளார். இதுவரை 500க்கும் மேற்பட்டவர்களுக்கு ரூ. 500 பெற்றுக் கொண்டு கரோனா நெகட்டிவ் சான்றிதழ் தயாரித்து கொடுத்துள்ளார். இன்பர்கான் தங்கம் உள்பட பல பொருட்களை வெளி நாட்டிற்கு கடத்தும் குருவியாக செயல்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டது.

போலி கரோனா நெகட்டிவ் சான்றிதழ்

இதனையடுத்து இன்பர்கானை ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இன்று (அக்.20) சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் தலைமறைவாக உள்ள இன்பர்கானின் நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:பாரத் நெட் திட்டம் மூலம் 12 ஆயிரம் கிராமங்களுக்கு இணைய சேவை!

ABOUT THE AUTHOR

...view details