அரசுத் தேர்வுத்துறையில் உதவியாளர் பணிக்கு சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பெயரில் போலி பணி நியமன உத்தரவு வழங்கப்பட்ட தகவல் கடந்தவாரம் வெளியானது.
இது கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அந்த போலி பணி நியமன ஆணையில் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் கையொப்பம் மற்றும் சீல் போலியாக பதிவு செய்யப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு தேர்வுகள் துறையில், இளநிலை உதவியாளர்களுக்கான எந்த விதமான பணி நியமனங்களும் நேரடியாக நடைபெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளன.